யாழ்ப்பாணம், கிளிநொச்சியிலும் “டெல்டா” திரிபு தொற்றுள்ளோர் அடையாளம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹெமந்த ஹேரத் அறிவித்துள்ளார்.

நாட்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸின் டெல்டா திரிபு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு மாவட்டங்களையும் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.
>
இந்தியாவில் வேகமாகப் பரவி ஆயிரக் கணக்கானோரின் உயிரை டெல்டா திரிபு பறித்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post