கொரோனா வைரஸ் தொற்று நோயைத் தொடர்ந்து கனடாவில் கடந்த 16 மாதங்களாக அமுலிலில் உள்ள கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மெல்லத் தளர்த்தப்படுகின்றன.
எனினும் குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மட்டுமே கட்டுப்பாட்டுத் தளர்வுகள் உடனடியாக அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் இன்று திங்கள்கிழமை முதல் வெளிநாடுகளுக்குச் சென்றுவரும்போது 14 நாள் தனிமைப்படுத்தலைத் தவிர்க்க முடியும்.
அத்துடன், இரண்டு தடுப்பூசிகளையும் விமானப் பயணிகளுக்கு கனடா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் மூன்று நாட்கள் தனிமைபடுதிக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
பயணம் செய்யும் கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், பயணத்துக்கு மூன்று நாட்களுக்குள் எடுத்த கோவிட் தொற்றில்லை என்ற அறிக்கையையும் காண்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.