யாழில் நடந்த விபத்து! மோட்டார் சைக்கிளுடன் மதிலை உடைத்துக் கொண்டு பாய்ந்த ஹன்ரர்!! (படங்கள்)

யாழ்.ஊரெழு - கரந்தன் வீதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஞானவைரவர் வீதி ஒழுங்கை ஊடாக மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிய பெண்கள் கரந்தன் - ஊரெழு பிரதான வீதியில் திடீரென ஏறியபோது எதிரே வந்த ஹன்ரர் வாகனத்தில் மோதியுள்ளது.

இதயைடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கீழேவிழுந்துள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள் ஹன்ரர் வாகனத்தின் பவரில் கொழுவியதால் இழுத்துச் சென்று அருகில் உள்ள வீட்டின் மதிலை உடைத்து பாய்ந்து விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பெண்களில் ஒரு பெண் 8 மாத கர்ப்பிணிப் பெண் என்பதுடன் 2 வயது சிறுமியும் பயணித்துள்ளனர். காயமடைந்த இரண்டு பெண்கள் உடனடியாக அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

2 வயது சிறுமி காயங்களின்றி தப்பியுள்ளார். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டனர்.

படங்கள். நிருஜன் செல்வநாயகம்





Previous Post Next Post