மருத்துவக் கழிவுகளை எரியூட்ட மண்டைதீவு தெரிவு! மக்கள் எதிர்ப்பு!!

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மண்டைதீவு மருத்துவமனைக்கு அருகாமையில் யாழ்ப்பாண மருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரி தொட்டி (Incinerator) அமைப்பதற்கான இடத் தெரிவினை வேலனை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான மண்டைதீவு பொது அமைப்புகளின் இணக்கப்பாட்டினைப் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் நாளை 07.07.2021 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற ஏற்பாடகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பல பிரதேசங்கள் காணப்படும் நிலையில் மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி மக்களின் மருத்துவ தேவைகளை ஓரளவேனும் நிறைவு செய்கின்ற மண்டைதீவு மருத்துவமனை சுற்றயல் தேர்வு செய்யப்பட்டு இருப்பது எதிர் காலத்தில் சுற்றுச் சூழல் சீர்கேடு மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும் என உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் மண்டைதீவு மருத்துவமனை சூழலில் மண்டைதீவு சிவாலயம், வீரபத்திரர் கோவில் என்பன அமை‌ந்து‌ள்ளதுடன் மண்டைதீவு மகா வித்தியாலயம் மருத்துவமனையில் இருந்து 350 மீட்டர் துரத்தில் உள்ளமையை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Previous Post Next Post