முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் தடுப்புக்காவலில் உள்ளார்.
இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சிகிச்சை பெற விரும்புவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்குத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, அவர் முதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவ ஆலோசனையின் பேரில் ரிசாத் பதியுதீன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இருதய சிகிச்சை வழங்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.