பிரான்ஸில் தற்காலிக வதிவிட உரிமம் உள்ள சுமார் 28 ஆயிரம் பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஜூன் மாதம் 2021 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 28 ஆயிரம் பேருக்கு வதிவிட அனுமதிப் பத்திரங்கள் மறுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் தொகை கடந்த வரும் இதே காலப் பகுதியை விட 50 வீதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 9 மாதங்களில் 699 நிரந்தர வதிவிட உரிமம் உள்ளவர்களின் வதிவிட உரிமப் பத்திரம் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 699 பேரும் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்தினாலேயே அவர்களின் நிரந்தர வதிவிட உரிமம் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.