இரண்டாம் இணைப்பு:
ஆச்சரியப்படத்தக்க வகையில், அரங்கத்தை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான ரசிகர்களால் West End and Wembley இல் தோல்வியால் போத்தல்களால் எறிந்து கண்ணாடிகளை உடைத்தும் நடந்துகொண்டனர். வீதி முழுக்க குப்பைகளாக மாறியது.
கைவிடப்பட்ட பொருட்களில் இங்கிலாந்து கொடிகள் மற்றும் உடைந்த மதுப்போத்தல்கள் அணியின் நினைவுச்சின்னங்களும் வீதியில் எறிந்து காணப்பட்டன.
நேற்றைய யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் இறுதிச் சுற்றில் இத்தாலி இங்கிலாந்தை வீழ்த்தி 3-2 என்ற கோல்கணக்கில் இத்தாலி கிண்ணத்தை வென்றதுடன் 1968 ஆம் ஆண்டுக்கு பின்னர் 2 ஆவது முறையாக சம்பியன்கிண்ணத்தை வென்றது.
முதலாம் இணைப்பு:
இங்கிலாந்து Leicester Square இல் இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் உணவக கடைகளின் கண்ணாடிகள் போத்தல்களால் எறிந்து உடைத்துள்ளனர்.
வீதிகள் எங்கும் குப்பைகளும் கண்ணாடி துகள்களுமாக உள்ளது. ரசிகர்கள் தொட்டிகளில் இருந்த மரங்களையும் பிடுங்கி எறிந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும், யூரோ 2020 கால்பந்து தொடர் கடந்த மாதத்தில் இருந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த தொடருக்கான இறுதிப் போட்டி பிரித்தானியாவின் உள்ளுர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமானது.
இந்த இறுதிப் போட்டி, லண்டனில் இருக்கும் வெம்லி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகள் மோதின.
யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த இறுதிப் போட்டி, லண்டனில் இருக்கும் வெம்லி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகள் மோதின.
யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
துப்பரவுப் பணியாளர்களால் தூய்மைப்படுத்தப்படும் காட்சிகள்: