யாழ்.பஸ் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞன்!


ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டும் எனக்கோரி யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்னால் மலையகத்தைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது தங்கையின் இறப்பிற்கு நீதி வேண்டும் ஜனாதிபதி குறித்த சிறுமி உயிரிழப்பு தொடர்பில் நேரடியாக தலையிட்டு சிறுமியின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும், சிறுமியின் மரண விசாரணை அறிக்கை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் எனக்கோரி மலையகத்தைச் சேர்ந்தவர் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
Previous Post Next Post