பிரிட்டனில் கறுப்பினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
வேல்ஸ் மாநிலத்திலுள்ள நியூபோர்ட் நகரில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை, பொலிசார் ஒருவர் தடியால் தாக்குகிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கறுப்பின இளைஞரை தாக்கிய காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பிளொயிட் என்ற இளைஞனை வீதியில் வைத்து தனது காலால் கழுத்தை நெரித்து கொன்ற பொலிஸ் அதிகாரி டெரெக் சா என்பவருக்கு பல ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.