மகனைத் தேடி வந்த வாள்வெட்டுக் குழு! தந்தை மற்றும் தாய் மீது தாக்குதல்!!- யாழில் சம்பவம்


இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகனைத் தேடி வந்த நிலையில் அவர் வீட்டில் இல்லாத நிலையில் தந்தை மற்றும் தாயைத் தாக்கிவிட்டு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.

சம்பவத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயக்குமாரி ஆகிய இருவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post