காணாமற்போன நெடுந்தீவு மீனவர் தமிழகக் கரையில் சடலமாக மீட்பு! (படங்கள்)


ஒரு வாரமாக காணாமற்போன நெடுந்தீவு மீனவர், தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தமிழக செய்திகள் தெரிவித்தன.

நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டார் மரியதாஸ் என்ற மீனவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நெடுந்தீவு கடற்கரையிலிருந்து கட்டுமரம் ஒன்றில் அவர் தொழிலுக்குச் சென்றுள்ளார்.

எனினும் அவர் கடந்த ஒருவாரமாக கரை திரும்பவில்லை என்று குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அவரது சடலம் தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்தன.

Previous Post Next Post