நாட்டில் முன்னுரிமை தொழில்பாடாக பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட்- 19 தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் நாடுமுழுவதும் பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில் வயதுக் கட்டுப்பாடின்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.