யாழ்.சாவகச்சேரியில் இளம் ஆசிரியர் உயிரிழப்பு!

சாவகச்சேரி கல்வயல் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் ஆசிரியர் ஒருவர்  புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளர்.

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் சங்கீத ஆசிரியரான பாலசுப்பிரமணியம் செந்துரன் (வயது 32) என்ற ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

திருமணம் செய்து சில வருடங்களில் தீடிரென தலையில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

புற்று நோய் தாக்கம் அதிகமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

குறித்த ஆசிரியர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 2008 ஆம் ஆண்டு உயர்தரத்தில் கலைப் பிரிவில் கல்வி பயின்ற பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post