யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தரோதயா ஆரம்பப்பிரிவு அதிபர் பொன்னம்பலம் தயானந்தன் (வயது-53) நேற்றைய நாள் (11) திடீர் உடல்நலக் குறைவினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 09ஆம் திகதி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது அவரும் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர் என்று கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருந்தபோதிலும் அவர் ஏற்கனவே இருதயப்பாதிப்புக்கு உள்ளானவர் என்றும் மாரடைப்பு ஏற்பட்டே அவர் உயிரிழந்திருந்ததாகவும் மருத்துவத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை,
தடுப்பூசிகள் குறித்து கருத்துவெளியிட்ட சுகாதாரத் தரப்பினர்,
யாழ்.குடாநாட்டில் முதற்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு 2 கட்ட தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
அதேபோல அடுத்த 50ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இவற்றினால் ஆபத்தான சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை.
நோய்பாதிப்புக்கள் இருப்பவர்கள் தமது நோய் அறிகுறிகள் குறித்து மருத்துவர்களுக்கு தெரியப்படுத்தி ஊசிகளைப் பெற்றுக்கொள்வதால் பாதிப்புக்களை முற்றாகத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்தன.