நாட்டில் நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளன. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை மேலும் 14 நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் திருமண மண்டபங்களின் ஆசனங்களின் எண்ணிக்கையில் 25 சதவீதமானோரின் பங்கேற்புடன் திருமண விழாக்களை நடத்த முடியும். விருந்தினர்களின் ஆகக் கூடிய எண்ணிக்கை 150ஆக இருக்க வேண்டும்.
இறுதிச் சடங்குகளில் ஆகக் கூடியது 50 பேர் பங்கேற்க முடியும்.
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஆகக் குறைந்த உத்தியோகத்தர்களுடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும். நிறுவனத் தலைவர் தீர்மானத்தில் படி உத்தியோகத்தர்களை கடமைக்கு அமர்த்த முடியும்.
கூட்டங்கள் மாநாடுகளுக்கு மண்டபத்தின் இருக்கையின் எண்ணிக்கையில் 25 சதவீதமானோர் பங்கேற்புடன் நடத்த முடியும்.
தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களின் அனுமதியுடன் திறக்க முடியும்.
வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை நடத்த அனுமதி.