யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை மட்டும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் இன்று நண்பகல் உயிரிழந்தார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்வடைந்துள்ளது.