யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நட்டபட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 28 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.