செப்டம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் கோவிட்-19 தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அனைத்து மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றன.
துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய சேவை பணியாளர்கள், சுகாதாரம், ஆடை மற்றும் விவசாயத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படுகிறது.