நாட்டை முழுமையாக முடக்கும் எந்தத் தீர்மானம் ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் எட்டப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார்.
ஆனால் நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் சில நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மேலதிக விவரங்களை இராணுவத்தளபதி வெளியிடுவார் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கோவிட்-19 மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள், அமைச்சர்கள், இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதன்போது நாட்டில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கவில்லை. மாறாக தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த பரிந்துரையளிக்கப்பட்டது.