30 வருடங்களுக்கு முன் ஜேர்மனி வந்த யாழ்.நபரின் பரிதாப நிலை! (காணொளி)


ஜேர்மனியில் வாழும் யாழ்.தமிழரின் பரிதாப நிலை தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

ஜேர்மனி நாட்டில் காகன் மாநிலம் கோல்லிம் போர்க் புகையிரத நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர் ஒரு வேளை உணவுக்கு அவ்விதியால் செல்லும் பயணிகளிடம் கோரிவருகின்றார். இதேவேளை குறித்த நபர் 30 வருடங்களுக்கு முன் ஜேர்மன் நாட்டுக்கு வந்ததாவும் அந் நாட்டு மொழி ,சட்டதிட்டங்கள், நடைமுறைகள்அனைத்திலும் திறமைமிக்க ஒருவராகவும் உள்ளதாக அவருடன் பேசிய தமிழ் இளைஞர் தெரிவித்துள்ளார்.

தனது பெயர் பிரபா என்றும் , சொந்த இடம் யாழ். கொடிகாமம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவரை அடையாளம் தெரிந்த அம் மாநிலத்தில் வாழும் மனிதநேயமிக்க தமிழர்கள் அவருக்கு உதவ முன்வருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post