பதிவுத் திருமணம் நடத்த அனுமதி! கட்டுப்பாடுகள் இன்று முதல் இறுக்கமாக்கப்படும்!!


தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகள் இன்று முதல் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில், சம்பந்தப்பட்ட உத்தரவுகள் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மதித்து, பொதுமக்கள் வீட்டினுள் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்தினார்.

இதற்கிடையே, நாளை முதல் திருமணத்திற்கு சட்டப்படி அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே பதிவுத் திருமணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

நாளை முதல் வரவேற்பு மண்டபங்கள் அல்லது வீட்டிலோ திருமண விழாக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்றாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் கலந்து கொண்டு திருமணப் பதிவு நடைபெறலாம் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

அதன்படி, மணமகன், மணமகள், அவர்களின் பெற்றோர், பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சிகள் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Previous Post Next Post