யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரும் கைதடியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் மானிப்பாயைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவரும் அளவெட்டியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192 ஆக உயர்வடைந்துள்ளது.