ஊரடங்குச் சட்டம் நீடிப்பு!


நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு செப்ரெம்பர் 6ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணியின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு வரும் 30ஆம் திகதி நீக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு மேலும் ஒருவாரத்துக்கு நீடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post