காரைநகரிலிருந்து பயணிகளுடன் யாழ்.நோக்கி வந்த பஸ் விபத்து! (வீடியோ)


காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச. பேருந்து விபத்துக்குள்ளாகி தடம்புரண்டதில் 10 பேர் படுகாயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவித்தன.

காரைநகர் சாலைக்குச் சொந்தமான 784 வழித்தடப் பேருந்தே இன்று காலை 7.30 மணியளவில் கல்லுண்டாய்வைரர் தடம்புரண்டது.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்து கல்லுண்டாய் பகுதியில் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்ப்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டையிழந்து இழுத்துச் செல்லப்பட்டு தடம்புரண்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




Previous Post Next Post