இளம் தாயையும் பிள்ளையையும் பலியெடுத்தது கொரோனா! வவுயினாவில் துயரம்!!


வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இளம் தாயும் ஒரு வார குழந்தையும் மரணமடைந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கோவிட் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாய் ஒருவரும், அவரது ஒரு வாரக் குழந்தையும் கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்கள் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும், அவரது ஒரு வார குழந்தையும் என தெரியவந்துள்ளது.

குறித்த இருவரினது சடலத்தையும் பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்வதற்குரிய நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post