ஜேர்மனியில் கொரோனாத் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜேர்மனி வுப்பர்டலையில் வசித்து வந்த சுகந்தினி சந்திரரஜா கடந்த 29 ஆம் திகதி இவ்வாறு உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை புலம்பெயர் நாடுகளில் கொரோனாத் தொற்றுக் காரணமாக பல தமிழர்கள் உயிரிழந்துள்ளதுடன், பாரியளவில் தொற்றுக்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், கனடா போன்ற நாடுகளிலேயே தமிழர்கள் கொரோனாத் தொற்றால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறி;ப்பிடத்தக்கது.