மண்டைதீவு றோ.க.த.க பாடசாலையில் கடற்படையினரால் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் கையளிப்பு! (படங்கள்)

யாழ்ப்பாணம் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் கடற்படையினரால் கடந்த ஏப்ரலில் அத்திவாரமிடப்பட்டுப் புதிதாக அமைக்கப்பட்ட 2 மாடிக் கட்டடம் மற்றும் வர்ணம் தீட்டிச் சீரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் என்பன இன்று திறக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன் போது பத்துக் கணிணிகள் அடங்கிய கணிணி ஆய்வுகூடமும் கையளிக்கப்பட்டுள்ளது. 2 மாடிகள் கொண்ட கட்டடத்தில் மேல் தளத்தில் நூல்களுடன் கூடிய நூலகமும் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைகள் கடற்படையினரின் 70 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல விளையாட்டு உபரகணரங்களும் பாடசாலைக்கென 40 தளபாடங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, கத்தோலிக்க மதகுருமார்கள், வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், மற்றும் உதவிச் செயலாளர் , தீவகம் வலயக் கல்விப்பணிப்பாளர் தி.ஞானசுந்தரன், வேலணை கோட்டக் கல்வி அதிகாரி கா.சசிதரன், உட்பட்ட கடற்படையினரின் பொறுப்பதிகாரிகளும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களும் மாணவர்களும் நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர்.

நிகழ்வு காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகியது.>


Previous Post Next Post