யாழ்.கல்வியங்காடு பகுதியில் வர்த்தக நிலையம் மீது வாள்வெட்டுத் தாக்குதல்! பெற்றோல் குண்டு வீச்சு!! (படங்கள்)

யாழ்ப்பாணம்  கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது நேற்று மாலை (12) வியாழக்கிழமை  6.40 மணிக்கு  இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால்  பல்பொருள் அங்காடி கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் வாள்களால் வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகளை வெட்டிச் சேதப்படுத்தியதுடன் பொருட்களையும் சேதப்படுத்தியதாகவும் பின்னர் பெற்றோல் குண்டு வீசிவிட்டுத் தப்பின் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.





Previous Post Next Post