யாழில் கொரோனாத் தொற்றால் மேலும் மூவர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 3 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் சுன்னாகம் ஊரெழுவைச் சேர்ந்த 56 வயதுடைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

கொடிகாமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் அனுமதி பகுதியில் பணியாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 155ஆக உயர்வடைந்துள்ளது.
Previous Post Next Post