கோப்பாய்- கைதடி வீதியில் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றது.
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவர்களை மோதித்தள்ளியது. இதில் 34 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தில் பின்னிருக்கையில் அமர்ந்து சென்ற குறித்த பெண் வீதியில் வீழ்ந்து தலைப் பகுதியில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
சுழிபுரத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கொடிகாமத்தில் உள்ள கணவனின் தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.