ஹொரணவிலிருந்து பாணந்துறைக்கு பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது இருக்கையில் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பேருந்து நடத்துனர் எழுப்பிய போது அவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
பின்னர் பேருந்து பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார்.
சுமார் 65 வயதிற்குட்பட்ட அந்த பெண் பற்றி தங்களுக்கு குறிப்பிட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் கூறினர்.