நெல்லியடி இராஜகிராமம் பகுதியில் இன்றிரவு இரண்டு கிழக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 15 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“நெல்லியடி இராஜகிராமம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே இன்றிரவு மோதல் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு தரப்பையும் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டது. நாட்டில் நிலவும் கோவிட்-19 நோய்த்தொற்று நிலை காரணமாக அவர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
15 பேருக்கும் எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று பொலிஸார் கூறினர்.