யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு தாய், குழந்தை பிரசவித்த நிலையில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடையவரும் யாழ்ப்பாணம் அஞ்சல் சேவை பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியரும், அஞ்சல் சேவை உத்தியோகத்தருமான சதீஸ்குமார் அபிமினி என்ற தாயாரே நேற்று (14) உயிரிழந்துள்ளார்.
அவரது பெண் குழந்தை நலமுடம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
“செப்ரெம்பர் 8ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கோவிட்-19 சிகிச்சை விடுதியில் மருத்துவக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அன்றைய தினமே பெண் குழந்தை பிறந்துள்ளது.
தாயாருக்கு தொடந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.