யாழில் கோவிட்-19 நோய்த் தொற்றால் மேலும் ஆறு பேர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்ட 82 வயதுடைய முதியவர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாங்குளத்தைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் கச்சேரி நல்லூர் வீதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

நெல்லியடி கரணவாயைச் சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவரது சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இயற்றாலையைச் சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும் நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 271ஆக உயர்வடைந்துள்ளது.
Previous Post Next Post