யாழ்.இருபாலை கிழக்கு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு! (படங்கள்)

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவினால் நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் இருபாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கனடாவில் வசிக்கும் யோகராஜ் சச்சின் அவர்களின் நிதிப் பங்களிப்புடன் குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ் உதவித் திட்டங்கள் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெய்வேந்திரன் கிரிதரன், இருபாலை கந்தவேள் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் உமாகரன் மற்றும் நாகலிங்கம் கிருஷ்ணதாசன் ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.













Previous Post Next Post