கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி இன்று உயிரிழந்த மாற்றுவலுவுடைய ஊடகவியலாளரான ஞானப்பிரகாசனம் பிரகாஷ் தன்னுடைய உடலை யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு வழங்குவதற்கு கோரிக்கைவிடுத்துள்ளமை தொடர்பிலான ஆவணம் வெளியாகியுள்ளது.
குறித்த ஆவணம், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளரால் பிரகாசுக்கு எழுதப்பட்ட கடிதமாகும்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இறந்த பின் உடலைத் தானம் செய்தல்
மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக தங்களுடைய கடிதம் கிடைத்தது. நீங்கள் இறந்த பின் உங்களுடைய உடலை மருத்துவ பீடத்திற்குத் தானம் செய்வதாயின் உங்களுடைய உடலை மருத்துவபீடத்திற்கு ஒப்படைக்கும்படி மரண சாசனம் ஒன்று எழுதி வைத்தல் வேண்டும். மரணசாசனம் ஒரு பிரசித்த நொத்தாரிசினால் தயாரிக்கப்பட்டு நீங்கள் அதில் கையொப்பமிடல் வேண்டும்.
என்று அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு சிரேஸ்ட உதவிப் பதிவாளரால் கையொப்பமிடப்பட்டுள்ளது.
பிரகாஷ் அதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தபோதிலும் கொரோனாவால் உயிழிந்த அவரின் உடலை அவரின் விருப்பத்திற்கு ஏற்ப கையளிக்க முடியாது என்பதே தற்போதை காலத்தின் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.