நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாக் காட்சிகள்! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் இன்று தேர்த் திருவிழா இடம்பெற்றது.

நாட்டில் நடைமுறையில் உள்ள கோவிட்-19 சுகாதார நடைமுறைகளின் கீழ் ஆச்சாரியார்கள், தொண்டர்களுடன் தேர்த்திருவிழா உள் வீதியில் இடம்பெற்றது.

இன்றைய தினம் அதிகாலை சிறப்பு வழிபாடுகள், வசந்தமண்டப வழிபாட்டைத் தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதங்கள் ஒலிக்க காலை 7 மணிக்கு கந்தன் பிள்ளைத் தேரில் உள்வீதியுலா வந்து காட்சியளித்தார்.

நல்லூர்க் கந்தனின் அடியவர்கள் வீட்டிலிருந்து வழிபாடுகளை முன்னெடுக்கும் வகையில் ஆலய தர்மகத்தாவினால் நேரலை ஒளிபரப்பு நடத்தப்பட்டது.

நல்லூர் ஆலய தேர் உற்சவத்தினை தரிசிக்க அடியவர்கள் ஆலயத்திற்கு வருவதை தடுக்கும் முன்னேற்பாடாக நல்லூர் ஆலய வெளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அத்தோடு ஆலயத்திற்கு முன்பாக பொலிஸாரின் பேருந்து ஒன்று வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டது.

நல்லூர் ஆலய கொடியேற்றம் கடந்த ஒகஸ்ட் 13ம் திகதி இடம்பெற்றபோது பொலிஸாருக்கும் பக்தர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.














Previous Post Next Post