யாழ்.கல்வியங்காடு பகுதியில் வர்த்தக நிலையம் உடைத்துக் கொள்ளை! (வீடியோ)

யாழ்.ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்றிரவு (04)  கொள்ளையிடப்பட்டுள்ளது. 

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் வர்த்தக நிலையத்தின் முன்பக்க பூட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டதுடன், பாதுகாப்புக் கமராவின் டிவி.ஆரையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளரினால் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








Previous Post Next Post