கழிவுகளைக் கொட்டிய யாழ்.மாநகர சபை! வேலணை பிரதேசம் குப்பைத் தொட்டியா? பிரதேச சபை உப தவிசாளர் கண்டனம்!!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி யாழ்.மாநகர சபையினால் கழிவுகள் கொட்டப்பட்டமைக்கு சபையின் உப தவிசாளர் பொன்னம்பலம் நடனசிகாமணி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
 
“யாழ்.மாநகர சபையின் குப்பைத் தொட்டி வேலணை பிரதேசமா” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். மாநகரப் பகுதியில் மாநகர சபையினரால் புல்லுக் குளம் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், குளத்தில் இருந்த கழிவுகளை வேலணை பிரதேச சபையின் அனுமதியின்றி, மண்கும்பான் விநாநகர் சனசமூக நிலையத்துக்கு அருகில் டிப்பர் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் யாழ் மாநகர சபையின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கைக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அது தொடர்பில் வேலணை பிரசே சபைக்கும் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து அங்கு சென்று பார்வையிட்ட பிரதேச சபை  உப தவிசாளர் மற்றும் அதிகாரிகள் கழிவுகளுடன் வந்த இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்தது திருப்பி அனுப்பியிருந்தனர். 

மேலும் ஏற்கனவே குறித்த பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை மீளவும் அகற்றுமாறு எழுத்து மூலம் கோரியுள்ளதுடன் யாழ். மாநகர சபையின் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post