யாழில் மின்னல் தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு! (வீடியோ)


மின்னல் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

அச்சுவேலி வடக்கை சொந்த இடமாகவும் உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா மதனபாலன் (வயது-41) என்பவரே உயிரிழந்தார்.

வயலில் உழவில் ஈடுபட்ட போது சம்பவம் இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post