காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து அதிசிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டார்.
அதன்படி, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ஆம் திகதிவரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் திகதியிலிருந்து 12 மாதங்கள் நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை ஒக்டோபர் முதலாம் திகதி காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் அடுத்த ஆண்டு மார்ச் 22ஆம் திகதிவரை தொடர்புடைய திகதியிலிருந்து 06 மாதங்கள் நீடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.