தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டது!


நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம்திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம்திகதி முதல் 30 ஆம்திகதி வரை அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பின்னர் தளர்த்தப்படாமல் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்க கடந்த கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Previous Post Next Post