19 வயதுடைய இளம் பெண் உட்பட யாழில் இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!


யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் 19 வயதுடைய இளம் பெண் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிவான் வீதி, சுழிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதேபோல, உயிரிழந்த நிலையில் அடையாளப்படுத்தப்படாத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட ஆண் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post