பிறந்து 24 நாள்களேயான குழந்தை கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
நீர்வலியைச் சேர்ந்த பவிகரன் நிருஜா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளார்.
“நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வெளிநோயாளர் பிரிவில் பரிசோதனை செய்த போது குழந்தை உயிரிழந்துள்ளார்.
பிசிஆர் பரிசோதனையில் குழந்தை கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேமகுமார் மேற்கொண்டார்.