வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோயினால் உயிரிழந்துள்ளார்.
வளர்ப்பு நாய் அவருக்கு கடித்து மறுநாளே உயிரிழந்த நிலையில் உரிய தடுப்பூசியைப் பெற்று சிகிச்சை பெறாத நிலையில் நீர்வெறுப்பு நோயினால் குடும்பத்தலைவர் இன்று உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அச்சுவேலி தோப்பைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது-44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
சென்றமாதம் வளர்ப்பு நாய் அவருக்கு கடித்துள்ளது. மறுநாள் நாய் இறந்துள்ளது. எனினும் அவர் உரிய சிகிச்சை பெறாதநிலையில் நேற்றுமுன்தினம் 28ஆம் திகதி தடுமாற்றம் தண்ணீரைக்கண்டால் பயம் என்ற நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் அவர் அன்றிரவு அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாளான நேற்றுக் காலை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் குடும்பத்தலைவர் இன்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்” என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்று மேற்கொண்டார்.