வாய்க்காலுக்குள் தவறி வீழ்ந்த 6 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சங்கானை தேவாலய வீதியில் இடம்பெற்றுள்ளது.
சங்கானை ஸ்தான அ.மி.தக பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் நிறோஜன் ஸ்டீபன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியத்திலிருந்து சிறுவனைக் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்ததையடுத்து அயலவர்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
இரவு 9.30 மணியளவில் வீட்டுக்கு அண்மையாகவுள்ள குள வாய்க்காலில் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.