உலக மது ஒழிப்பு தினமான நாளை (ஒக்ரோபர் 3) ஞாயிற்றுக்கிழமை மதுபான சாலைகள் அனைத்தும் மூடப்படவேண்டும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தக் கட்டளையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நாடுமுழுவதும் ஆயிரம் அலுவலகர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
“மதுபான நிலையங்களில் விற்பனை செய்தல், மதுபானங்களை ஏற்றிச்செல்லல் மற்றும் விநியோகித்தல் ஆகியன நாளை தடை செய்யப்பட்டுள்ளது. மீறிவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மதுவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.