பிறிமா மற்றும் செரண்டிப் இரு நிறுவனங்களும் கோதுமை மாவின் விலையை உயர்த்தியுள்ளன.
அதன்படி, நிறுவனங்கள் இன்று முதல் கோதுமை மாவின் விலையை கிலோ கிராமுக்கு 10 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளன.
இதேவேளை, 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை இன்று முதல் 93 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதன் புதிய விலை ஆயிரத்து 98 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.