அல்லைப்பிட்டியில் நடக்கும் ஊரி மண் கொள்ளை! (படங்கள்)

அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதியில் ஊரி மண் கொள்ளை இடம்பெற்று வருவதாக அப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அப் பகுதியில் தனியார் பாடசாலை அமைப்பதற்கென பிரதேச செயலகத்தால் 46 ரைக்டர் ஊரி மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இருந்தும் இம் மண் அகழ்வு தொடர்ந்து இதுவரை 80ற்கும் மேற்பட்ட ரைக்டர் அளவுகளைத் தாண்டி அகழப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அல்லைப்பிட்டி நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான இடத்திலேயே குறித்த ஊரி மண் அகழப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   


Previous Post Next Post