யாழில் சுமந்திரன் எம்.பிக்கு எதிராகப் போராட்டம்! உருவப் பொம்மையும் எரிப்பு!! (வீடியோ)

உள்ளூர் இழுவைப் படகுகள் தொழிலில் ஈடுபடுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் குருநகரில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை கடற்தொழிலாளர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவ பொம்மையையும் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

உள்ளூர் இழுவை படகு தொழிலில் ஈடுபடுவோர் அமைச்சர் ஒருவருக்கு தினமும் 5 ஆயிரம் ரூபாய் கப்பம் செலுத்துகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.







Previous Post Next Post